கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டியில், பெங்களுரு, செகந்திரபாத் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், 11ம் ஆண்டு லட்சுமி அம்மாள் நினைவு சுழற் கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து 16 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூர் ஹாக்கி அசோசியேஷன் அணி,செகந்திராபாத் சென்ட்ரல் ரயில்வே அணிகள் மோதுகின்றன.