அதிரடி சலுகைகளை அறிவித்ததன் மூலம் ஒரேநாளில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் செய்து அலிபாபா நிறுவனம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இணையதள வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனாவின் அலிபாபா நிறுவனம் கடந்த ஞாயிற்றுகிழமை சிங்கிள்ஸ் டே என்ற பெயரில் அதிரடி சலுகைகளை அறிவித்தது. அன்றையதினம் வர்த்தகம் துவங்கிய ஒரு நிமிடம் 25 வினாடிகளில் ஒரு பில்லியன் டாலர் அளவிற்கு விற்பனை நடைபெற்றதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் 24 மணிநேர வர்த்தக முடிவில் 30 புள்ளி 8 பில்லியன் டாலருக்கு பொருட்கள் விற்பனையாகியுள்ளன. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய். அலிபாபா நிறுவனத்தின் வர்த்தகம் ஆண்டுக்கு 27 சதவீதம் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.