துபாயில் நடைபெறும் உலக அழகி போட்டியில் பட்டம் வெல்வதே தனது இலக்கு என்று மிஸ் சூப்பர் குலோப் இந்தியா 2019 அழகி போட்டியில் பட்டம் வென்ற தமிழகத்தின் அக்சரா ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்ட மிஸ் சூப்பர் குலோப் இந்தியா 2019 அழகிப் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த அக்சரா ரெட்டி பட்டம் வென்றார். இதனை தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் சார்பில் மிஸ் சூப்பர் குலோப் இந்தியா போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
அக்டோபர் மாதம் துபாயில் 45 நாடுகள் கலந்து கொள்ளும் உலக அழகி போட்டியில், இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ள உள்ளதாகவும், அதில், கலந்து கொண்டு உலக அழகி போட்டியில் பட்டம் வெல்வதே தமது இலக்கு என்றும், அதற்காக கடினமாக உழைத்து வருவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.