மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை அம்பத்தூர் அருகே தனியார் பள்ளியில் 41-வது ஆண்டு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் அதிகாரிகள் பங்கேற்றனர். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், இலங்கை தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள திமுகவும் ரத்தக் கரை படிந்த கட்சி என குற்றம்சாட்டினார். மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அவர் குறிப்பிட்டார். 

Exit mobile version