"நீட் தேர்வுக்கு எதிராக போராட அதிமுக தயார்"-அதிமுக எம்எல்ஏ வைத்திலிங்கம்

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசுடன் இணைந்து போராட அதிமுக தயார் என்று, சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் வைத்திலிங்கம் உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு என தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் அனைத்து போராட்டங்களுக்கும், அதிமுக ஆதரவு தரும் என்றும், அது வெற்றி பெறுமா..? என்பது தான் தன்னுடைய கேள்வி..? என்றும் வைத்திலிங்கம் கூறினார்.

ஒமிக்ரான் தொற்றை எதிர்கொள்ள புதிதாக தமிழ்நாடு அரசு ஏதாவது மருத்துவமனை அமைத்துள்ளதா..? என கேள்வி எழுப்பிய அவர், எதிர்க்கட்சியாக இருக்கும் போது வெள்ள நிவராணமாக ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என திமுக வலியுறுத்தியதை குறிப்பிட்ட அவர்,

வெள்ள நிவாரணமாக ஹெக்டேருக்கு 30 ஆயிரம் ரூபாயாவது கொடுக்க வேண்டும் என்பதைதான் தாங்கள் கேட்பதாக கூறினார். பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது அமல்படுத்தப்படும்? என்றும் 8 மாதங்கள் ஆன பிறகும், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, சமையல் எரிவாயு மானியம், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை ஆகியவற்றை வழங்கவில்லை என்றும் வைத்திலிங்கம் கேள்வி எழுப்பினார்.

ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் பலரும் தற்கொலை செய்து வருவதாக சுட்டிக்காட்டிய அவர், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இஸ்ரேலில் 4ஆம் தவணை தடுப்பூசி போடப்பட்டு கொண்டு கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இரண்டாம் தவணை தடுப்பூசியே முழுமையாக போடப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள டெல்டா மாவடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதிக்கக் கூடாது என்றும் வைத்திலிங்கம் வலியுறுத்தினார்.

 

Exit mobile version