அதிமுக – பாமக கூட்டணி இயற்கையான கூட்டணி- ராமதாஸ்

அதிமுக – பாமக கூட்டணி இயற்கையான கூட்டணி என்றும், 40 நாடாளுமன்ற தொகுதிகள் மட்டுமல்லாது 21 தொகுதி இடைத்தேர்தலிலும் இந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ், ஜி.கே. மணி, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். வரவுள்ள தேர்தலில், 40 தொகுதிகளிலும், அதிமுக – பாமக – பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற செய்வதென அப்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய ராமதாஸ், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அதிமுக-பாமக கூட்டணி வெல்ல கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Exit mobile version