சாணானந்தலில் உள்ள சப்த கன்னிமார் ஆலயத்தில், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அக்னி கரக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் உள்ள சாணானந்தல் கிராமத்தில் சிறப்பு மிகுந்த சப்த கன்னிமார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கிராம மக்கள் கலந்துகொண்ட அக்னி கரக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழா 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு, நடைபெற்ற திருவிழாவில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
அக்னி கரக பூஜையுடன் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் தீச்சட்டியை பக்தர்கள் தங்கள் தலை மீது தூக்கி வரும் காட்சி பார்வையாளர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இதனைத்தொடர்ந்து, ஏழு கன்னிமார்களுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.