இலங்கை நாடாளுமன்றத்தில் மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை தோற்கடிப்போம் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் இருமுறை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் குரல் மூலம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என அதிபர் சிறிசேனா அதை நிராகரித்தார். இந்த நிலையில் ஆட்சியை கலைத்த பின்னர் புதிய அரசை அமைப்பதற்கான பெரும்பான்மை ரணில் கூட்டணிக்கு இல்லை என்றும் மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தால் அதை தோற்கடிப்போம் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.