லிபியா தலைநகர் திரிபோலியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
திரிபோலியில் உள்ள அகதிகள் முகாமில் சூடான், சோமாலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட அகதிகள் தஞ்சமடைந்து வசித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் அகதிகள் முகாம் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இந்த தாக்குதலில் முகாமில் இருந்த 40 பேர் கொல்லப்பட்டதாகவும் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.