தலைமை ஆணையராக இருந்த ஷீலா ப்ரியா கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வயது மூப்பு அடிப்படையில் பணியில் இருந்து விலகினார். இதனால் தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்தவதற்காக தேடுதல் குழு அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகியோர் அடங்கிய தேடுதல் குழு இதுகுறித்து ஆலோசனை நடத்தியது.
இந்த நிலையில், தலைமைத் தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு தொடர்ந்து, தேடுதல் குழுவின் சார்பில் பரிந்துரைக்கப்படும் பெயர்களை தமிழக அரசு பரிசீலித்து அதற்கான உத்தரவுகளை வெளியிட உள்ளது.
முதலமைச்சர் பழனிசாமி, நிர்வாக சீர்த்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் ஆய்வு செய்து தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடைபெற்றது.