திருவண்ணாமலை மாவட்டத்தில் நெடுஞ்சாலையின் ஓரமாக உள்ள மரங்களில் பொருத்தப்பட்டு இருந்த தனியார் நிறுவனங்களின் விளம்பர பலகைகளை இளைஞர்கள் அகற்றினர்.
மங்கலம் நெடுஞ்சாலை ஓரத்தில் அதிகளவில் புளியமரங்கள் உள்ளன. இந்த மரங்களில் தனியார் நிறுவனங்கள் விளம்பர பலகைகளை, ஆணி மூலம் பொருத்தியுள்ளனர். இந்தநிலையில், அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து மரம் நடுவோம், மழை பெறுவோம் என்ற நோக்கத்துடன்
தனியார் விளம்பர பலகைகள் மற்றும் ஆணிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தனியார் நிறுவனங்கள் இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்று இளைஞர்கள் கேட்டுக் கொண்டனர்.