தண்ணீரைச் சேமிக்க பாரம்பரிய முறைகளைப் பின்பற்ற வேண்டும் என மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் நாட்டின் பல்வேறு பகுதிகள் தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், இந்தியாவில் பெய்யும் ஒட்டு மொத்த மழைநீரில் 8 சதவீதம் மட்டுமே சேகரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். சமூக ஆர்வலர்கள் தண்ணீரை முறையாக பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை பொதுமக்கள் விளக்க வேண்டும் என்றும், பாரம்பரிய தண்ணீர் சேகரிப்பு முறைகள் பற்றிய தகவல்களை தனி மனிதர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தனது அமைச்சரவையில் நீர் மேலாண்மைக்காக ஜல் சக்தி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.