அதிமுக சார்பாக மாநிலங்களவையில்…எலிபண்ட் விஷ்பரர்ஸ் ஆவணப்படம் ஆஸ்கர் விருது பெற்றதற்காக எம்பி தம்பிதுரை வாழ்த்து!

எலிபண்ட் விஷ்பரர்ஸ் (The Elephant Whisperers) ஆவணப்படம் ஆஸ்கர் விருது பெற்றதற்காக அதிமுக சார்பில் மாநிலங்களவையில், வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இது தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் விஷயம் என்று மாநிலங்ளவை உறுப்பினர் தம்பிதுரை தெரிவித்தார்.ஆர்.ஆர்.ஆர்.படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கும், தி எலிபண்ட் விஷ்பரர்ஸ் என்ற ஆவணப்படத்திற்கும் திரை உலகின் உயரிய ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் இந்த படக்குழுவினருக்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்கள் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர்.

அப்போது பேசிய மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் தம்பிதுரை, ஆஸ்கர் விருதுபெற்ற படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டதுடன், எலிபண்ட் விஷ்பரர்ஸ் ஆவணப்படம் நீலகிரியில் படமாக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

Exit mobile version