18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் – உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. கொறடா கேவியட் மனுதாக்கல்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்தால் தன் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து காலியான தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தநிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்தால் தங்களின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஏற்கனவே சபாநாயகர் தனபால் கேவியட் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது அ.தி.மு.க. கொறடாவும் கேவியட் மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Exit mobile version