பெண் குழந்தைகளை பாதுகாத்த அதிமுக ஆட்சி!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் தனது ஆட்சிகாலங்களில் பெண் குழந்தைகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி அதனை வெற்றிகரமாக செயல்படுத்தவும் செய்தார். நேற்று ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது. அதேபோல் அம்மா ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதியை மாநில பெண் குழந்தை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் பெண்குழந்தைகளுக்காக கொண்டு வந்த நலத்திட்டங்களைப் பற்றி சொல்வது மாளாதது. அந்த அளவிற்கு அவர்கள் அதிகமான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார். 1992ஆம் ஆண்டு பெண்குழந்தைகளைப் பாதுகாக்க பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் ஒன்றினை அம்மா ஜெயலலிதா அவர்கள் அறிமுகப்படுத்தினார். அத்திட்டத்தின்படி, குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் 50,000 ரூபாய், இரண்டுபெண் குழந்தை இருந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் 25,000 ரூபாய் வங்கியில் வைப்பு வைத்து இருபது வருடங்களுக்குப் பிறகு அப்பெண் குழந்தையின் திருமணத்திற்கு வட்டியுடன் சேர்த்து தொகையினைப் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அத்திட்டத்தில் சொல்லப்பட்டது.

மேற்கொண்டு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பேரில் கொண்டுவரப்பட்ட திட்டத்தில் பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்கமானது தாலியாக அளிக்கப்பட்டது. மேலும் தொட்டில் குழந்தைத் திட்டம் 1992ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மிக முக்கியமானத் திட்டமாகும். இத்திட்டத்தின்படி, பெண்குழந்தைகளை வளர்க்க முடியாதவர்கள் அக்குழந்தைகளை அரசிடம் ஒப்படைத்தால் அரசே அக்குழந்தைகளை வளர்க்கும் செலவினை ஏற்றது. கல்வி பயிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தினை 2012 மார்ச் மாதம் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகள் மற்றும் தாயின் உடல் எடையினையும் சத்துக்குறைபாட்டினையும் தெரிந்துகொள்ளுமாறு திட்டம் கொண்டு வந்தார். மேலும் குழந்தைகள் நலப் பரிசுப்பெட்டகம் அமைக்கப்பட்டது. அதனுள் 16 பொருட்கள் அடங்கியத் தொகுப்பு இருந்தது. பெண்கள் பல்வேறுத் துறைகளில் சாதனை புரிந்தால் கல்பனா சாவ்லா விருது தங்கமுலாம் பூசப்பட்டு வழங்கப்பட்டு 5 லட்சம் பரிசுத்தொகையும் தரப்பட்டது. இவ்வளது நலத்திட்டங்களைப் பெண்களுக்காக கொண்டுவந்த புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி மாநிலப் பெண்கள் குழந்தை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version