அ.தி.மு.க 47வது ஆண்டு துவக்க விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது

அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற அதிமுகவின் 47வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியில் 107 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர்.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 47வது ஆண்டு துவக்க விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் 47வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டுள்ளனர். 107 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அவர்கள் வழங்குகின்றனர். 

இந்தநிகழ்ச்சியில், அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திரளான தொண்டர்கள் பங்கேற்று உள்ளனர்.

Exit mobile version