கண்ணை கவரும் 3டி ஒலி, ஒளி காட்சியில் மின்னிய ஆதியோகி சிலை பார்வையாளர்களையும், பக்தர்களையும் கவரும் வகையில் இருந்தது.
ஆதியோகி சிவபெருமானுக்கு கோவை ஈஷா யோகா மையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி சிலையை காண்பதற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வருகை புரிகின்றனர்.
இந்நிலையில், ஆதியோகியின் வாழ்க்கையை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஆதியோகி திவ்ய தரிசனம் என்னும் 3டி ஒலி, ஒளி காட்சியை கடந்த மகாசிவராத்திரி அன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் துவக்கி வைத்தார். இதையடுத்து கடந்த 4ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட சுபதினங்களில் இந்த 3டி காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி இரவு 8 மணிக்கு துவங்கி சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த 3டி காட்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.