அடிலெய்டு டெஸ்ட் – ஆஸ்திரேலியாவை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி

அடிலெய்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 250 ரன்களையும், ஆஸ்திரேலியா 235 ரன்களையும் எடுத்தன. இதேபோல் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி, சிறப்பாக ஆடி 307 ரன்கள் குவித்தது. ஆனால் ஆரம்பம் முதலே இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தவித்த ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்து திணறியது.

இறுதியாக ஆஸ்திரேலிய அணி 291 ரன்களுக்கு சுருண்டது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியை 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி கைப்பற்றியது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னில்லையில் உள்ளது.

15 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Exit mobile version