நடிகை ஓவியாவின் 90ML திரைப்படத்திற்கு தடைவிதிக்க கோரிக்கை

நடிகை ஓவியா நடித்து வெளியாகியுள்ள 90ML திரைப்படத்திற்கு தடைவிதிக்கக்கோரி தேசிய முஸ்லீம் லீக் கட்சி சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகை ஓவியா நடித்து சமீபத்தில் வெளியான 90 ML திரைப்படம், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பெண்களின் புனிதத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி பல்வேறு தரப்பினர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த திரைப்படத்தை உடனடியாக தடை செய்ய வலியுறுத்தி முஸ்லீம் பெண்கள் அமைப்பு ஒன்றின் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

Exit mobile version