ஏன் ஃபார்முலா ரேஸ்? நடிகை நிவேதா பெத்துராஜ் அசத்தல் பதில்

நடிகை நிவேதா பெத்துராஜ் ஃபார்முலா ரேஸ் கார் பயிற்சியை முடித்துள்ளார்.

இந்நிலையில் ஏன் இந்த பயிற்சிக்கு ஆசைப்பட்டேன் என்பதற்கு நிவேதா அளித்த பதில், இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து நடிகை நடிகை நிவேதா பெத்துராஜ் கூறியதாவது… ”கார்களின் மீதான காதல், பள்ளிக்கு சென்ற சிறு வயதிலேயே ஆரம்பித்துவிட்டது. நான் 8-வது படித்துகொண்டிருக்கும் போது எங்கள் வீட்டின் அருகில் வசித்த எனது அத்தை ஒருவர் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கினார்கள். அப்போதிலிருந்தே ஸ்போர்ட்ஸ் கார் மீது தீவிர ஆர்வமும், வேட்கையும் என்னுள் உருவாகிவிட்டது.

என்னுள் பல வருடங்களாக நீடித்திருந்த இந்த வேட்கையில் 2015-ல் “Dodge Challenger” ஸ்போர்ட்ஸ் காரை மிக ஆசையுடன் வாங்கினேன். UAE நாட்டில் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கிய இரண்டாவது பெண் நான் தான். ஆனால் இந்த காரில் மிக வேகமாக போக்கக்கூடிய V6 Engine இருந்ததை, எனது தந்தை விரும்பவில்லை. ஆனால் நான் மிக நம்பிக்கயுடனும், உறுதியுடனும் அந்த காரை ஓட்டினேன்.

image

அது மிக அற்புத அனுபவமாக இருந்தது. அதைத்தொடர்ந்து துபாயில், F1, மற்றும் Lexus, Rolls Royce, Chevrolet போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் கலந்துகொள்ளும் Dubai Motor shows-க்களில் கலந்துகொண்டு வேலை செய்தேன். இது கார்களின் மீதான எனது காதலை இன்னும் அதிகமாக்கியது.

Exit mobile version