நடிகர் சித்தார்த் நடித்துள்ள ‘உதயம் NH4’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அஷ்ரதா ஷெட்டி, இந்திய கிரிக்கெட் வீரர் மணீஷ் பாண்டேவை திருமணம் செய்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த அஷ்ரிதா ஷெட்டி, தமிழில் “உதயம் NH4 , ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், இந்திரஜித் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ‘நான் தான் சிவா’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடி வரும் மணீஷ் பாண்டேவை திருமணம் செய்து உள்ளார்.
ஆனால், இந்த திருமணத்திற்கு பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கதை ஒன்று உள்ளது. 30 வயதே ஆன மனிஷ் பாண்டே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். பெங்களூரை சேர்ந்த இவர் இதுவரை இந்திய அணிக்காக 23 ஒருநாள் போட்டிகளிலும், 31 டி-20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இந்நிலையில், மணிஷ் பாண்டே தலைமையிலான கர்நாடக அணி சூரத்தில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து, மணீஷ் பாண்டே வெற்றி களைப்போடு திருமணத்தில் கலந்து கொண்டு நடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணமுடித்துள்ளார்.
பெற்றோர்களால் நிச்சயமிக்கப்பட்ட இந்த காதல் திருமணம் மிகவும் கோலாகலமாக மும்பையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.