விருது வழங்கும் நிகழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்ட அமலா பால்

தனியார் ஊடகம் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை அமலா பால், மேடையில் உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார்.

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை அமலா பால். தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த இவர், ‘ஆடை’ படத்தின் மூலம் தனது வேறொரு பரிமாணத்தை திரையில் காட்டினார். ஆடை படத்தை இயக்குநர் ரத்ன குமார் இயக்கியிருந்தார். பெண் ஒருவர் ஆடையின்றி ஓர் இடத்தில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்ற பின்னணியில் இந்தக் கதையை வடிவமைத்திருந்தார்.

இந்நிலையில் “ஆடை ” படத்தில் நடித்ததற்காக அமலா பாலுக்கு, தனியார் ஊடகம் ஒன்று விருது வழங்கி கவுரவித்தது. அப்போது, மேடையில் அமலா பால் பேசுகையில், இதற்கு முன்பு பல படங்களுக்காக விருதுகள் வாங்கி இருக்கிறேன். ஆனால், அதற்கு தகுதியான நபரா என்று தெரியவில்லை. தற்போது, கிடைத்துள்ள விருது, முதல் முறையாக எனது நடிப்புக்காக வாங்கியது போல் இருக்கிறது.

“ஆடை ” படத்தில் கதாநாயகி இருப்பதை மட்டும் பார்த்த நீங்கள், அதில் பல ஹீரோக்கள் இருப்பதாக தெரிவித்தார். அதில், முதல் ஹீரோ எனது அப்பா. படத்தில் நடிக்க தொடங்கிய போது நிறைய பயம் இருந்தது. அப்போது, எனக்கு தைரியம் கொடுத்தவர் அப்பா.  கல்லால அடிப்பாங்க, திட்டுவாங்க, ஆனா அதை எல்லாம் தாண்டி, ஒரு நடிகன் அவன் வேலையில் நூறு சதவீதம் கொடுக்க வேண்டும் என்று அப்பா நம்பிக்கை கொடுத்தார். மேலும், தொடர்ந்து இது போன்ற அங்கீகாரத்துக்காக நான் உழைப்பேன்’ என அவர் கூறினார்.

இதற்கிடையே, முன்னணி நாளிதழுக்கு பேட்டியளித்த அமலா பால், விவாகரத்துக்காக வேறு யாரையாவது குறை கூறுவது முறையற்றது என்றும், தானே இந்த முடிவை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதோடு தனுஷ் தனது நலம் விரும்பி எனவும், நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த பிளவு குறித்து தான் மேலும் எதுவும் பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

Exit mobile version