பேனருக்குப் பதில் தாய், தந்தையருக்கு புத்தாடை வாங்கிக்கொடுங்கள் – ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுக்கோள்

தனது பேனருக்கு பால் அபிஷேகம் செய்வதற்கு பதிலாக தங்களின் தாய், தந்தையருக்கு புத்தாடை எடுத்துக்கொடுத்து, புகைப்படமாக சமூக தளத்தில் பதிவிடுங்கள் என நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார்.

வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி ரிலீசாக உள்ள “வந்தா ராஜாவாதான் வருவேன்” திரைப்படத்துக்கு பிளாக்கில் டிக்கெட் வாங்கி, படம் பார்க்க வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version