நடிகர் ரஜினிகாந்தின் அனுமதியின்றி அவரது பெயர், புகைப்படம், குரலை பயன்படுத்த கூடாது!

நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரஜினிகாந்தின் பெயர், குரல், படம் உள்ளிட்டவைகள் பல்வேறு தளங்களில் தவறாகப் பயன்படுத்துவது அவரது கவனத்திற்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்த் அங்கீகரிக்காமல் அவரது பெயர், குரல், புகைப்படங்களை பயன்படுத்துவது, பொதுமக்களிடையே குழப்பத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இதனை யாராவது மீறினால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்டப்படி உரிமையியல், குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Exit mobile version