விஜயகாந்த் உடனான சந்திப்பில் துளி அளவு கூட அரசியல் கிடையாது

விஜயகாந்த் உடனான சந்திப்பில் துளி அளவு கூட அரசியல் கிடையாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

உடல்நிலை பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அண்மையில் வீடு திரும்பினார். இதையடுத்து அவரை முக்கியப் பிரமுகர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை காண, அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். ரஜினிகாந்தை விஜயகாந்தின் இளையமகன் சண்முக பாண்டியன் மற்றும் சுதீஷ் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது ரஜினிகாந்த் பேசுகையில், விஜயகாந்த் உடனான சந்திப்பில் துளி அளவு கூட அரசியல் கிடையாது. தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, தன்னை வந்து முதலில் பார்த்தவர் விஜயகாந்த் எனத் தெரிவித்தார்.

Exit mobile version