இன்ஸ்டாகிராமில் 17 வயது சிறுமியிடம் அத்துமீறி பேசியதாக நடிகர் டேனி மீது புகார் எழுந்த நிலையில், சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
2013ஆம் வெளியான இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு நண்பனாக நடத்த டேனி, அந்த படத்தில் பேசிய ‘பிரெண்டு லவ் மேட்டரு’ என்ற வசனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார்.
அதற்கு பிறகு வெள்ளித்திரையில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பரபலமானார் டேனி. தொடர்ந்து தனியார் தொலைகாட்சி நடத்திய நிகழ்ச்சி பங்கேற்ற அவருக்கு ரசிகர்கள் வட்டாரம் விரிவடைந்தது. டேனியின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் ரசிகர்கள் பலரும் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 17 வயது சிறுமியிடம் அத்துமீறி பேசியதாக சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் டேனி. பகல் நேரங்களில் இயல்பான குறுந்தகவல்களை அனுப்பும் டேனி நள்ளிரவு நேரங்களில் சிறுமியின் போட்டோவை கேட்டு தொல்லை கொடுத்ததாகவும், சில நேரங்களில் வீடியோ காலில் வர வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
சிறுமியிடம் அத்துமீறி இன்ஸ்டாகிராமில் டேனி அனுப்பிய குறுந்தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. டேனியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள், புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றனர். சர்ச்சை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் டேனி இதுவரை விளக்கம் அளிக்காமல் இருப்பது புகார் மீதான சந்தேகங்களை மேலும் வலுவடைய செய்வதாக அமைந்துள்ளன.