பிரபல நாடக ஆசிரியரும், நடிகருமான கிரேஸி மோகன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 66.
நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரேஸி மோகன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 1952 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி பிறந்த கிரேஸி மோகன், கிரேஸி கிரியேஷன்ஸ் நிறுவனத்தை தொடங்கி மேடை நாடகங்களுக்கு வசனம் எழுதி வந்தார்.
மெட்டி ஒலி, ஆச்சி இன்டர்நேஷனல் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களுக்கும் வசனம் எழுதி புகழ்பெற்றவர். 1983 ஆண்டு முதல் பொய்க்கால் குதிரை திரைப்படத்தின் மூலன் வசனம் எழுத தொடங்கிய அவர், கமல்ஹாசனின் சதி லீலாவதி, அபூர்வ சகோததரர்கள், அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
அவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கிரேஸி மோகன் மறைவிற்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துள்ளார்.