உலகிலேயே விமானத்தில் பயோ எரிபொருள் பயன்படுத்தி அபுதாபி சாதனை

அபுதாபியில் உலகில் முதன் முறையாக எரிபொருட்களுக்கு பதிலாக செடியில் இருந்து தயாரிக்கபட்ட பயோ பியூல் கொண்டு விமானம் இயக்கப்படுகிறது.

உலக நாடுகள் பலவும் எரிசக்தியில் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக பெட்ரோலியம் அல்லாது சூரிய ஒளி மின்சாரம் என புதிய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது.

இதில் புதிதாக அபுதாபியில் ஸ்மாட் சிட்டி எனப்படும் மஸ்தார் சிட்டியில், அரசு சார்பில் அமைக்கபட்டு வரும் தொழில்நுட்ப பூங்காவில், புதிய கண்டுபிடிப்புகள், மாற்று எரிசக்தியால் இயங்கும் தொழில்நுட்பம் என அனைத்தும் இங்குதான் உருவாக்கப்படுகிறது. இந்த வளாகத்தில் பயிரிடப்படும் சாலிக்கோர் செடியிலிருந்துதான் விமானத்திற்கு தேவையான எரிப்பொருள் தயாரிக்கப்படுகிறது.

அது என்ன சாலிகோர்னியா? தெரியாத பெயராக இருப்பதாக நினைக்க வேண்டாம். இதுவும் நமது கிராமங்களில் கிடைக்கும் ஒருவகை மூலிகை செடி தான். ஆம், இதனை தண்ணீர் விட்டான் செடி என்று ஊர்புறங்களில் கூறுவர். இதைதான் ஆங்கிலத்தில் சாலிகோர்னியா என்று அழைக்கின்றனர்.

அமீரகத்தில் முதன்முதலாக துபாயில் உள்ள சர்வதேச பயோசலைன் வேளாண்மை மையத்தில், சாலிகோர்னியா செடிகளை வளர்த்து சாகுபடி செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அபுதாபியில் உள்ள மஸ்தார் நகரில், இரண்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிடபட்டது சாலிகோர்னியா.

இந்த தாவாரம் தண்டு அமைப்பை உடையது. பொதுவாக இவை வறண்ட நிலத்திலும், உப்புநீர் உள்ள பகுதியிலும், இயற்கையாக காணப்படும். இதில் இருந்து பெறப்படும் திரவம், காய்ச்சி வடித்தல் முறையில் எரிபொருளாக மாற்றப்படுகிறது. இதிலிருந்து பெறப்படும் எரிபொருள், அதிக செயல் திறனும், குறைந்த புகையினையும் வெளியிடுவதாக உள்ளது.

உலகில் முதன் முறையாக, எதிகாத் விமான நிறுவனம், இந்த எரிப்பொருளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. அபுதாபியில் இருந்து நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகருக்கு செல்லும், போயிங் 787 ரக விமானத்தில் இந்த பயோ எரிபொருள் பயன்படுத்தப்பட்டு வெற்றிகரமாக பயணம் செய்துள்ளது. ஜனவரி மாதம் 16-ந் தேதி இந்த சாதனை நிகழ்த்தபட்டுள்ளது.

இதன் காரணமாக, அமீரகத்தில் வரும் காலத்தில், உணவு மற்றும் எரிப்பொருள் துறையில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. தமிழகம் மற்றும் கேரளாவில், இயற்கை மருத்துவத்திற்காக சாலிகோர்னியா வளர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version