ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து சுமார் 100 பேர் பலி

ஈராக்கில் ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஈராக்கில் உள்ள குர்திஷ் இன மக்கள் சுமார் 200 பேர் புத்தாண்டை கொண்டாடுவதற்காக படகு ஒன்றில் மொசூல் நகர் அருகே உள்ள டைகரிஸ் ஆற்றை கடந்து உம் ரப்பேயின் தீவிற்க்கு சென்றனர். அப்போது அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததால் அந்த படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்தவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இதுவரை 55 பேர் உயிருடன் மீட்கப்படுள்ள நிலையில் மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

படகில் அதிக நபர்களை ஏற்றி சென்றதால்தான் விபத்து ஏற்பட்டதாகவும் இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஈராக் நாட்டு அதிபர் அப்துல் மாஹ்தி தெரிவித்துள்ளார். மேலும் இத்துயர சம்பவத்தையடுத்து ஈராக்கில் 3 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version