உ.பி.யில் மகா கும்பமேளா விழா: முதல் நாளில் மட்டும் சுமார் 1.4 கோடி பேர் நீராடல்

உத்தர பிரதேச மாநில மகா கும்பமேளாவின் துவக்கநாளில் மட்டும் சுமார் ஒரு கோடியே 40 லட்சம் பக்தர்கள் புனித நீராடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 ஆறுகள் ஒன்று சேர்வதாகக் கூறப்படுகிறது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கொருமுறை நடக்கும் மகா கும்பமேளா நிகழ்ச்சி நேற்று முதல் துவங்கி மார்ச் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக உலகம் முழுவதும் இருந்தும் கோடிக்கணக்கான சாதுக்கள் புனித நீராட வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் மகா கும்பமேளா துவங்கிய முதல் நாளில் மட்டும் சுமார் ஒரு கோடியே 40 லட்சம் பக்தர்கள், திரிவேணி சங்கமத்தில் குளித்து, தங்களது சடங்குகளை மேற்கொண்டுள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version