பாகிஸ்தானின் பிடியில் சிக்கிய அபிநந்தன் நாடு திரும்புகிறார்

பாகிஸ்தானின் பிடியில் சிக்கிய இந்திய விமானி அபிநந்தன் இன்று வாகா- அட்டாரி எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார்.

கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானப் படையை இந்திய விமானப் படை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியது. எனினும் இந்த சண்டையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 பைசன் விமானம் சேதமடைந்து பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது.

அதில் சென்ற விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. எனினும் அவருக்கு தாங்கள் எவ்வித துன்பமும் தரவில்லை என்பதை உலகிற்கு காண்பிக்கும் விதமாக அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வந்தது. இந்நிலையில் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுதலை செய்ய உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நேற்று வெளியிட்டார். இதன்படி வாகா – அட்டாரி எல்லையில் அவர் இன்று இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுவார் எனத் தெரிகிறது.

Exit mobile version