அப்துல் கலாம் நினைவு மாரத்தான் ஓட்டம்

சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைப்பெற்ற அப்துல் கலாம் நினைவு மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் இந்தப் பந்தயம் நடத்தப்பட்டது. மூன்று, ஏழு, பத்து, 12 கிலோ மீட்டர் என நான்கு வகையாக பிரிக்கப்பட்டு தனித்தனியாக ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. பூலாம்பட்டியில் தொடங்கிய ஓட்டம், எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முடிவுற்றது.

இந்தப் போட்டியில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஊக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Exit mobile version