தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கழிவுநீர் கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்ட உலோகத்தாலான ஆண்டாள் சிலை, வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கவரை தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயை நகராட்சி துப்புறவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது, ஒரு பெரிய பிளாஸ்டிக் பை கண்டெக்கப்பட்டது. பையில் உலோகத்தலான சாமி சிலை ஒன்று இருந்ததை பார்த்த துப்பரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து ஒன்றரை அடி உயரமுள்ள உலோகத்தாலான ஆண்டாள் சாமி சிலை வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.