பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா தொடங்கியது

நெல்லையில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆடிபூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் சமேத காந்திமதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆடிப்பூர விழா இன்று தொடங்கியது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு காந்திமதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து, அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

Exit mobile version