தொடர்ந்து ஆடையின்றி போட்டோ வெளியிடும் கிரிக்கெட் வீராங்கனை..

இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனையான சாரா ஆடையின்றி கிரிக்கெட் பேட்டை கையில் வைத்துக்கொண்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

 

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை சாரா டெய்லர் பேட்டிங் மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பிங் செய்வதிலும் அதீத திறமை கொண்டவர்.ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக சில போட்டிகளில் பங்கேற்கவில்லை.இந்நிலையில் ஒவ்வொரு பெண்ணும் அழகு எனக்கூறி இங்கிலாந்து வீராங்கனையான சாரா சில நாட்களுக்கு முன்பு ஆடையின்றி விக்கெட் கீப்பிங் செய்வது போல் புகைப்படம் வெளியிட்டார்.அதில்’ இது சற்று கூச்சமாக இருந்தாலும் , மன அழுத்தத்தில் இருந்து எவ்வாறு வெளிவர வேண்டும் என விழிப்புணர்வு பரப்பி வரும் womenshealth என்ற இதழுக்கு, பெண்களின் நலுனுக்காக தனது நிர்வாண புகைப்படத்தை வெளியிடுவதால் பெருமை அடைகிறேன்’ என கூறினார். அந்த புகைப்படமானது அனைவராலும் அதிகம் பேசப்பட்டது.

இதனை தொடர்ந்து மீண்டும் கிரிக்கெட் பேட்டை கையில் வைத்துக்கொண்டு, விரைவில் விளையாட காத்திருக்கேன் என கூறி ஆடையின்றி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இவர் பதிவிட்ட புகைப்படமானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version