இந்த காலத்தில் இப்படியும் ஒருத்தரா ?

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அரசு பள்ளி ஆசிரியர் மழைவாழ் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பள்ளிக்கு கொண்டு சென்றுவிட்டு பின்னர் மாலையில் வீட்டுக்கு வந்து விடுகிறார். ஆசிரியரின் இந்த செயல் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

பெரியகுளம் வடகரை பகுதியில் அரசு உதவி பெறும் நெல்லையப்பர் நடுநிலை பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் தங்கபாண்டியராஜா. இவர், மலைவாழ் குழந்தைகள் போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் பள்ளி செல்லாமல் இருப்பதைக் கண்டார். பின்னர் குழந்தைகளின் பெற்றோரிடம் அனுமதி பெற்று, காலையில் தமது இருசக்கர வாகனத்தில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு பள்ளியில் குழந்தைகளை விடுகிறார். பின்னர் இவர் தாம் ஆசிரியராக பணியாற்றும் நெல்லையப்பர் நடுநிலை பள்ளிக்கு செல்கிறார். இதேபோல் மாலையிலும் குழந்தைகளை வீட்டுக்கு கொண்டு சென்று விடுகிறார். இந்த சேவையை கடந்த 3 ஆண்டுகளாக தங்கபாண்டிய ராஜா செய்து வருகிறார். இவரின் இந்த செயல் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version