இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு

அமெரிக்கா உடனான பிரச்சினை காரணமாக, துருக்கியின் பொருளாதாரம் வரலாறு காண வகையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், துருக்கி அதிபர் தாயிப் எர்டகோன், புதிய பொருளாதார கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்.
இதன் காரணமாக, சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு 69 ரூபாய் 62 காசுகள் என்ற அளவிற்கு சென்றது. கடந்த வார வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 68 ரூபாய் 84 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.  ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு இந்திய பங்குச்சந்தைகளில் எதிரொலித்துள்ளது. அதன்படி, மும்பை பங்கச் சந்தையில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
Exit mobile version