டிவி பார்க்க முடியாததால் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவன்

சென்னை தாம்பரம் அருகே கேபிள் இணைப்பை துண்டித்ததால் மனமுடைந்த 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்கரணை பகுதியை சேர்ந்த கொழஞ்சிநாதன்-சங்கீதா தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் வீட்டில் கடந்த ஒரு வருடமாக கேபிள் இணைப்பு இல்லாமல் இருந்த நிலையில் மகன்களின் வற்புறுத்தலின் பேரில் இணைப்பு கொடுக்கப்பட்டது.

கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்ட நாள் முதல் இருவரும் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது தாய் கேபிள் இணைப்பை துண்டித்து விட்டு பணிக்கு சென்றுள்ளார். பள்ளியில் இருந்து வீடு திரும்பிய இரண்டாவது மகன் அமுதீஸ்வரன், வீட்டில் கேபிள் இணைப்பு துண்டிக்கப்படிருப்பதை அறிந்து மனமுடைந்து படுக்கை அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Exit mobile version