மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டம்

பா.ஜ.கவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டம் காங்கிரஸ் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

பா.ஜ.கவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு இறங்கினார். இதன் விளைவாக எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை நடைபெற உள்ள நிலையில், இன்றைய எதிர்க்கட்சிகளின் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

Exit mobile version