ஜவ்வாது மலை பகுதியில் பெருகிவரும் பட்டாம்பூச்சிகளால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பசுமை நிறைந்த ஜவ்வாது மலை கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரத்து 600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கோடைகாலம் முடிவடைந்து மழைக்காலம் தொடங்கியுள்ளதால், இப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.
இந்தப் பகுதியில் வண்ண வண்ண பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நீர் இல்லாதபோதும் , பல்வேறு வண்ணங்களில் கண்ணைக்கவரும், இந்த வண்ண வண்ண அணிவகுப்புகளை சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மனகிழ்ச்சியுடன் பார்த்துச் செல்கின்றனர்.