பொன்னியின் செல்வன் சரித்திர திரைப்படத்தில் இருந்து நடிகர் சத்யராஜ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோழ மன்னன் ராஜராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை உருவாக்க இயக்குநர் மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். இத்திரைப்படத்தில் பழுவேட்டரையர் வேடத்தில் நடிக்க சத்யராஜ் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் 6 மாதங்கள் கால்ஷீட் வேண்டும் என்றும், வேறு எந்த படத்திலும் நடிக்க கூடாது’’ என்று நிபந்தனை விதிக்கப்பட்டதால் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து சத்யராஜ் விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.