நெல்லையில் உலக நன்மைக்காகவும் விவசாயம் செழிக்க வேண்டியும் பெண்களால் கொண்டாடப்படும் இந்திர விழா கோலாகலமாக நடைபெற்றது.
வருண பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் இந்திர விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நல்ல மழை பெய்து நாடு வளம் பெற வேண்டி, தாமிரபரணி நதியில் இருந்து எடுத்துவரப்பட்ட மண்ணில், பசுக்கன்று செய்த பெண்கள் மற்றும் குழந்தைகள் பாட்டுப் பாடியும் கோலாட்டம் ஆடியும் பகவானை வழிபட்டனர்.