பிரான்ஸ் நாட்டில் சேவல் கூவியதால், பக்கத்து வீட்டுக்காரர், சேவலின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் விநோதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தீவுகளில் ஒன்றான ஒலெரானில், மோரிஸ் என்ற சேவல், அதன் உரிமையாளர் கொரீன் என்பவரால் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரீனின் சேவல் அடிக்கடி கூவுகிறது என, அவர்கள் வீட்டின் அருகில் வசிக்கும் தம்பதிகள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனையடுத்து சேவலின் உரிமையாளர்கள் நீதிமன்றம் சென்ற நிலையில், வழக்கு தொடுத்தவர்கள் ஆஜராகவில்லை. சேவல் கூவுவது என்பது கிராமத்து வாழ்க்கையில் ஒன்று என்றும் அதை நிறுத்த வேண்டும் என்பது காரணமற்ற கோரிக்கையாகும் என, சேவல் உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு வரும் செப்டம்பர் மாதம் வழங்கப்படவுள்ளது.