7 வயது சிறுவன் வாயில் 526 பற்கள் இருந்தது, மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 வயது சிறுவனின் வாயிலிருந்து 526 பற்களை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். அந்த சிறுவன் பல் வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். எக்ஸ்-ரே மற்றும் சிடி ஸ்கேன் சோதனை நடத்தப்பட்டதில் கீழ் தாடைக்கு அடியில் நிறைய பற்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். 5 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் பற்களை முற்றிலும் அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சிகிச்சைக்கு பிறகு அந்த சிறுவன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.