ஸ்கேட்டிங் ஷூ அணிந்தவாறு ஸ்கிப்பிங் செய்யும் பள்ளி மாணவன்

ஸ்கேட்டிங் ஷூ அணிந்தவாறு ஒரு நிமிடம் 12 வினாடியில் 167 ஸ்கிப்பிங் செய்து உலக சாதனை முயற்சியை மேற்கொண்ட 11 வயது பள்ளி மாணவனுக்கு அமைச்சர் பாண்டியராஜன் பரிசு வழங்கி பாராட்டினார்.

சென்னை பெரம்பூரிலுள்ள வ .உ.சி மேல்நிலை பள்ளியில் படிக்கும் செபாஸ்டின் ஜோஸ்வா என்ற மாணவன், திருக்குறளின் மகத்துவத்தை வலியுறுத்தி ஸ்கேட்டிங் ஷூ அணிந்தவாறு அதிகமுறை ஸ்கிப்பிங் செய்து சாதனை படைக்கும் முயற்சியை மேற்கொண்டார். அதன் ஒருபகுதியாக ஒரு நிமிடம் 12 வினாடியில் 167 முறை ஸ்கிப்பிங் செய்தார். இதுகுறித்த தகவல் UNIVERSAL WORLD RECORD அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மாணவனை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பாண்டியராஜன், மாணவன் செபாஸ்டின் ஜோஸ்வாவுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

Exit mobile version