அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ள நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமர் கோயில் பூமி பூஜை சிறப்பாக நடைபெறுவதற்கு தனது சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார். 1992ஆம் ஆண்டில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி பேசியதை குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பின் படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட மத்திய அரசுக்கு பாராட்டுக்களை, முதலமைச்சர் தெரிவித்து கொண்டுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற இந்து மக்களின் கனவை நனவாக்கும் வகையில், ராமர் கோயில் பூமிபூஜை விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Discussion about this post