முதலைகள் தங்களுக்கு ஆபத்து வந்தால் மணிக்கு 17 கி.மீ வேகத்தில் கூட ஓடும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உயிரினங்களில் மிக வலிமையான ஒன்றாகவும், நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய தகுதியை பெற்றது முதலை. எதிரிகளை மிக தைரியமாக எதிர்கொள்ளும் முதலைகளில் அதிக எடை கொண்டவைகளால் வேகமாக செல்ல முடியாது என்ற கருத்து நிலவி உண்டு.
இந்நிலையில் முதலைகள் குறித்த ஆராய்ச்சி ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. இதில் முதலைகளின் வேகம் மற்றும் ஓடும் திறன் குறித்தும் சோதனை நடத்தப்பட்டது. இதில் தனக்கு ஆபத்து என்றவுடன் முதலைகளால் மணிக்கு 17 கிலோ மீட்டர் வரை ஓட முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் வேகமாக செல்ல முடியாத அதிக எடை கொண்ட முதலைகள் துள்ளிக்கொடுத்து ஓடியதாகவும், இது தங்களுக்கு மிகுந்த ஆச்சர்யம் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post