கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மழவராயநல்லூர் மக்கள் மீன் வளர்ப்பின் மூலம் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து வருகின்றனர்.
15 ஏக்கர் அளவில் குளம் அமைத்து அதில் மீன் வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். இங்கு வளர்க்கப்படும் கட்லா, பொட்லா ,ரோகு உள்ளிட்ட மீன்வகைகளை வியாபாரிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். மேலும் மாநில அரசின் மருந்து ஆலோசனைகள் மற்றும் உதவிகள் காரணமாக மீன்கள் நன்கு வளருவதால் வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.
தமிழக அரசின் பல்வேறு உதவிகள் காரணமாக பண்ணைக் குட்டைகள் அமைத்து மீன்வளர்க்கப்படுவதாகவும் இதனால் நல்ல வருமானம் கிடைப்பதாகவும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.
Discussion about this post