மக்களை ஏமாற்றும் வித்தைகள் அனைத்தையும் தெரிந்தவர் செந்தில் பாலாஜி என்றும் அவரிடம் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்றும் அமைச்சர் வீரமணி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்காக அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், சட்டமன்ற உறுப்பினராக இருந்து எந்தவொரு நலத்திட்டத்தையும் தொகுதிக்கு செய்யாத செந்தில்பாலாஜி தற்போது பொய்யான வாக்குறுதியை அளித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். இந்த பிரசாரக் கூட்டத்தில் நிர்மலா பெரியசாமி, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Discussion about this post