அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் என பலத் திடுக்கிடும் புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வரிசையில் தற்போது புதிதாக ஆள்கடத்தல் ஒன்று அம்பலத்திற்கு வந்துள்ளது. கரூர் குளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வானை. இவரது வளர்ப்பு மகன் கோகுல். இவர்களுக்கு சொந்தமாக சில ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு தமது மகன் கோகுலை, தற்போதைய திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். 8 ஆண்டுகளாக தன் மகன் திரும்ப கிடைக்கவில்லை என்றும் அழுது புலம்புகிறார் அவர்.
கடத்திச் செல்லப்பட்ட தன் மகனுக்குப் போதைப்பொருள் கொடுத்து மயக்கநிலையில் கையெழுத்து வாங்கி 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் அபகரித்துக் கொண்டதாக குற்றம்சாட்டி உள்ளார் தெய்வானை. தங்கள் சொத்துக்களை செந்தில் பாலாஜி தரப்பினர் விற்க முயன்ற போது எதிர்த்து கோகுல் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி,கோகுலை மிரட்டி வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில்தான் கோகுல் மாயமாகியுள்ளார். அன்று மாயமான தனது மகன் இதுவரை திரும்பக் கிடைக்கவில்லை என்று கூறும் அவர் தன் மகனை மீட்டுத் தரக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது மகன் கோகுல் மாயமான விவகாரத்தில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் மீதும் சந்தேகம் உள்ளதாகவே வழக்கு தொடுத்துள்ளார். ஆள்கடத்தல் புகாரில் சிக்கியிருக்கும் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தகுதி நீக்கம் செய்யப்படுவாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
Discussion about this post